11-வது ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 7-ந் தேதி மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேட்ச் பிக்ஸிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இத்தடை காலம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியுள்ளது. 11-வது ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ipl 11 season match table release. 1st match chennai super kings vs mumbai indians